0
இத படிக்கும் முன் இதையும் வாதாபி நகர விஜயம்!!!-1 and  வாதாபி நகர விஜயம்!!!-2  கொஞ்சம் படிச்சுட்டு வாங்க

வாதாபி நகரத்தில் சிவகாமி சபதத்தோடு தொடர்புடைய பார்க்க வேண்டிய இடங்கள் இரண்டு.
அவை  

  1. வாதாபி கோட்டை (Badami Fort)
  2. வாதாபி குடவறை கோவில்கள் (Badami Cave Temples)
எனக்கு தெரிஞ்சு வாதாபி ஏன் பாதாமியா மாறிருக்கும்னா கன்னடத்துல வா(தமிழ்) அப்படின்னா பா ன்னு சொல்லுவாங்க...    ...தா அப்படியே இருக்கு.பி ஏன் மி யா மாறுச்சுன்னு தெரியல...;-) இங்க உள்ளவங்க இங்க உள்ள மலைத்தொடர்கள் badam நிறத்துல இருக்குறதால இந்த பெயர் மாறிருக்கும்னு சொல்றாங்க...

வாதாபி கோட்டைக்கு உள்ளே நுழைவதற்கு முன் ஒரு பெரிய  ஏரி  இருக்கிறது என்று சொன்னேன்  அல்லவா ...அதனுடைய முழு படம் ....

ஐந்தாம் நூற்றாண்டை   சேர்ந்த படித்துறையும் ஏரியும்....
இன்னும் மக்கள் புழக்கத்துல இருக்கு  
சரி வாங்க உள்ளே போகலாம்...;-)
இது ஒரு சின்ன நுழைவாயிலாக தான் இருக்கிறது...இதோடு
சேர்ந்து ஒரு சுற்று சுவர் இருந்திருக்க வேண்டும்.அது சிதிலமடைந்த நிலையில் காண படுகிறது.museum க்கு நுழைந்த போதே ஒரு நுழைவாயில் வழியா நுழைஞ்ச ஞாபகம் இருக்கு.
அதை போட்டோ எடுக்காம விட்டுட்டேன்.
அதுதான் முதல் நுழைவாயில்.
உள்ளே நுழைந்தால் இன்னொரு பெரிய நுழைவாயில் இருக்கிறது.ஏனோ அதை கற்களை வைத்து மறைத்து வைத்திருகிறார்கள்.இதுவே கோட்டைக்கு போகும் பிரதான வாயிலாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.முன்னே பார்த்த வாயில் reception ஒ என்னமோ... வழி நெடுக காவலர்கள் இருந்துருப்பாங்க இல்ல..
இந்த கோட்டை இவ்வளவு காலம் நீடித்து இருப்பதற்கு காரணம் இது இரண்டு குன்றுகளுக்கு உள்ள இடைவெளியில் கட்ட பட்டிருகிறது.இடைவெளிக ளில் கற்சுவர்கள் அமைத்து கட்டி இருக்கிறார்கள். மாடமாளிகைகள் எல்லாம் குன்றின் மேற்புறத்தில் சம வெளியில் இருந்திருக்க வேண்டும்.
Image:
A Wandering mind (
 எல்லா இடத்துலயும் ஆர்வ கோளாறுல நானே நின்னு foto எடுத்துகிட்டேன்...  எவ்வளவுதான் இமேஜ் அ crop பண்றது..அதான்... )
நடை பாதை தளங்கள் அழகா அமைச்சுருகாங்க...இது அப்போவே அமைச்சதா இல்ல இப்போ மக்கள் வசதிக்காக போட பட்டதான்னு தெரியல...  அவ்வளவு அழகா கோவில்களே கட்டினவங்களுக்கு  நடை பாதை  தளங்கள்  அமைக்கிறதா  பெரிய விஷயம்...!!! ( படத்தில் இருப்பவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.:-)..Image:  A Wandering mind

மேற் பகுதிக்கு போகும் வழிகளின் புகை படங்கள் கீழே...



Pulikesi to Sivagami: இந்த அரண்மனைக்குள்ளே உன்னைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும் எண்ண வேண்டாம். உனக்கு இஷ்டமான போது நீ இந்த மாளிகையை விட்டு வெளியே போகலாம். வாதாபி நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். உங்கள் காஞ்சியைப் போல் எங்கள் வாதாபி அவ்வளவு அழகாயில்லாவிட்டாலும், ஏதோ பார்க்கத் தகுந்த காட்சிகள் இங்கேயும் இருக்கின்றன. இந்த அரண்மனை வாசலில் காவல் காப்பவர்கள் உன்னைச் சிறை வைப்பதற்காக இங்கு இருக்கவில்லை. உனக்கு ஏவல் புரிவதற்காக இருக்கிறார்கள்.

வாதாபியின் வீதியில் சிவகாமி நடனம் ஆடிய போது வானமும் பூமியும் அசைவற்று நிற்பது போல் தோன்றியது. வீதியிலே போய்க் கொண்டிருந்த வாதாபி நகர மாந்தர்கள் அப்படி அப்படியே நின்று அந்த விந்தையைப் பார்த்தார்கள். பந்தமுற்ற தமிழகத்து ஸ்திரீ புருஷர்கள் அசைவற்று நின்றார்கள்; கையில் சாட்டை பிடித்த கிங்கரர்களும் சும்மா நின்றார்கள்..Image:  A Wandering mind
போகிற வழிகளில் இந்த மாதிரி சின்ன சின்ன சிற்பங்கள் அங்க அங்க இருக்கு..

Kalki:ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னால் பரத கண்டத்தில் பிரசித்தி பெற்றிருந்த மூன்று சாம்ராஜ்யத் தலைநகரங்களில் வாதாபி ஒன்றாகும். கன்யாகுப்ஜத்தையும் காஞ்சியையும் போலவே வாதாபி நகரத்தின் புகழும் அந்த நாட்களில் கடல் கடந்து வெகுதூரம் சென்றிருந்தது. ஒவ்வொரு தடவை திக்விஜயம் செய்து திரும்பும் போதும் புலிகேசியின் படை வீரர்கள் வெற்றி கொண்ட தேசங்களிலிருந்து ஏராளமான செல்வங்களைக் கொண்டு வந்து வாதாபியில் சேர்த்து வந்தார்கள். இதனால் வாதாபி நகரம் வளங்கொழிக்கும் நகரமாய் அந்தக் காலத்தில் விளங்கிற்று. அந்நகரில் வர்த்தகம் சிறந்தோங்கியிருந்தது. தூர தூர தேசங்களிலிருந்தெல்லாம் அந்நகருக்கு இரத்தின வியாபாரிகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். .Image:  A Wandering mind

Kalki: பிரசித்தி பெற்ற ஜைன ஆலயங்களும் பௌத்த மடங்களும் வாதாபியில் இருந்தபடியால், பற்பல நாடுகளிலிருந்தும் யாத்திரிகர்கள் அந்நகருக்கு வருவதுண்டு. இதனாலெல்லாம் வாதாபி நகரம் எப்போதும் கலகலப்பாகவே இருந்து வந்தது. அதிலும் சக்கரவர்த்தி தலைநகரில் இருக்கும் போது கேட்க வேண்டியதில்லை. சக்கரவர்த்தியைப் பேட்டி காண்பதற்காகச் சிற்றரசர்கள் காணிக்கைகளுடன் வருவார்கள். சீனம், பாரசீகம் முதலிய தூர தூர தேசங்களிலிருந்து அரசாங்கத் தூதர்கள் வருவார்கள். மாடமாளிகைகள், கூடகோபுரங்களுடன் விளங்கிய வாதாபியின் வீதிகள் எப்போதுமே திருவிழாக் காலத்தைப் போல் ஜனக்கூட்டம் நிறைந்து விளங்கும். வண்டிகள் வாகனங்களின் சப்தம் ஓயாமல் கேட்ட வண்ணமிருக்கும். 
Kalki:காஞ்சி வீதிகளில் தெரிந்தவர்கள் சந்தித்தால் ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் முகமன் கூறிக் கொண்டார்கள். வாதாபியின் தெருக்களிலோ, தெரிந்தவர்கள் சந்திக்கும் போது இடி முழக்க ஒலியில் சிரித்து ஆர்ப்பரித்தார்கள். காஞ்சியில் எஜமானர்கள் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடும் போது கூட அன்புடனும், ஆதரவுடனும் பேசினார்கள். வாதாபியில் எஜமானர்கள் வேலைக்காரர்களிடம் பேசும் போது கடுமையான மொழிகளையும் துர்வசனங்களையும் கையாண்டார்கள். 

கொஞ்ச தூரம் நல்ல பாதையா இருக்கு அப்புறம் சில இடங்களில் கொஞ்சம் கடினமா இருக்கு...ஆனா ஏறிடலாம்.வயசனவங்கன்னா கொஞ்சம் கஷ்டம் தான்...நிறைய நடக்கணும்.


இத பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்.யாராவது தெரிஞ்சவங்களோட போனாதான் நல்லது..இல்லன்னா தொலைஞ்சு போய்டுவோம்...




இமேஜ் : http://musafirhuyaron.blogspot.in
இந்த பாதை வழிய நடந்து போன இந்த கோட்டையின் மேற்புறத்திற்கு சென்று விடுகிறோம்.அங்கு சமவெளியா இல்லன்னாலும் மாளிகைகள் இங்கே இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது...இனி  மேலே என்ன என்ன இருக்கு ன்னு பாக்கலாம்.

அங்கே தெரிவது  காவல் காரர்கள் இருந்து காவல் புரியும் watchtower
இன்னும் கொஞ்சம் பக்கத்தில் பார்ப்போமா 
ஆனா இது 14 th century சேர்ந்ததுன்னு  சொல்றாங்க (புலிகேசி காலம்  7th century...)  இமேஜ் : http://musafirhuyaron.blogspot.in
இதன் பக்கத்து குன்றில் ஒரு சிறிய கோவில் இருக்கிறது .வாதாபி விநாயகரை பரஞ்ச்யோதி இந்த கோவிலில் இருந்துதான் எடுத்து வந்ததாக கூற படுகிறது.இதை தான் வாதாபி விநாயகர் கோவில் என்று சொல்லுகிறார்கள்
இந்த படத்தில் வாட்ச் tower , விநாயகர் கோவில் ,கீழே உள்ள museum,மேலே உள்ள சிவன் கோவில்அனைத்தும் தெரிகிறது .கீழே இடது பக்கம் தெரியும் கோவில் lower சிவாலயா ... இந்த கோவில் தான் விநாயகர் kovil இங்கே இருந்து தான்  விநாயகரை எடுத்தாரோ ....
கோட்டைக்குள் அரண்மனை அல்லது அறைகள்  போன்ற அமைப்பு இருந்த அடையாளத்திற்கு சுற்று சுவர் தான் இருக்கு
இது தானிய கிடங்கா இருந்துருக்குமோ...இல்லை ஆயுத கிடங்கா...
அங்கே தூரத்தில் தெரிவதும் ஒரு watch tower தான்...ஆனா  நல்லா விசாலமானது...
இது மேலே உள்ள கோவில்.upper sivalaya என்று அழைகிறார்கள். 
இந்த கோவிலோட வீடியோ வ இங்க பார்க்கலாம்.



இந்த கல்வெட்டு மாமல்லரோட கல்வெட்டான்னு   தெரியல... 

நம்ம இதுவரைக்கும் பார்த்ததோட வீடியோ தொகுப்பு...


இது ஏரிக்கரையில் உள்ள பூதநாதர் கோவில்...
.

இந்த கோவிலோட வீடியோ வ இங்க பார்க்கலாம்.


இவர்தான் வாதாபி விநாயகர்.திரு செங்காட்டுகுடியில் இன்றும் கம்பிரமாக அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்."குதிரை மேலிருந்து இறங்கி வாசலை நெருங்கி வந்தார். அப்போது அந்த வாதாபிக் கோட்டை முன் வாசலில் அமைக்கப்பட்டிருந்த அருமையான வேலைப்பாடமைந்த சிற்பங்கள் அவர் கவனத்தைக் கவர்ந்தன. அந்தச் சிற்பங்களிலே கணபதியின் விக்ரகம் ஒன்றும் இருந்தது. பரஞ்சோதி அதன் அருகில் சென்று கைகூப்பி நின்றார். மனத்திற்குள் பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டார்: 'விக்னங்களையெல்லாம் நிவர்த்தி செய்யும் விநாயகப் பெருமானே நாங்கள் வந்த காரியம் நன்கு நிறைவேற அருள்புரிய வேண்டும் என் குருதேவரின் குமாரி சிவகாமி தேவிக்கு எவ்விதத் தீங்கும் நேரிடாமல் அவரைப் பத்திரமாய் அவருடைய தந்தை ஆயனரிடம் ஒப்புவிப்பதற்குத் துணைசெய்ய வேண்டும். என்னுடைய இந்தப் பிரார்த்தனையை நீ நிறைவேற்றி வைத்தால் பதிலுக்கு நானும் உனக்கு இந்தக் கோட்டைத் தாக்குதலில் எவ்வித தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன். உன்னை என் பிறந்த ஊருக்குக் கொண்டு போய் ஆலயங் கட்டிப் பிரதிஷ்டை செய்வித்துத் தினந்தோறும் பூஜையும் நடத்துவிக்கிறேன். "

என்னோட அடுத்த பதிவுல உங்கள நான் வாதாபிக்கே கூட்டிட்டு போகபோறேன்...அங்கே நீங்க நின்னு பார்த்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்...பொய் இல்லங்க நிஜம்...

இதன் தொடர்ச்சி :

Post a Comment Blogger

 
Top