புது stainless ஸ்டீல் பாத்திரம் வாங்கும் போது அதன் மீது ஒட்டியுள்ள ஸ்டிக்கர்களை நீக்க ஒரு எளிய வழியை என் பெரியம்மா சொன்னார்.
பொதுவாக இந்த ஸ்டிக்கர்கள் எளிதாக எடுக்க வராது.அப்படியே எடுத்தாலும் முழுதாக பிய்த்து எடுக்க முடியாது.அங்கு அங்கு ஒட்டி கொண்டு பார்க்கவும் நன்றாக இராது.இந்த முறை மூலம் எளிதாக எடுக்க வருகிறது எந்த மார்க்கும் இல்லாமலே...
ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் .காஸ் அடுப்பிலோ இல்லை மெழுகுவர்த்தியிலோ ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் பக்கத்திற்கு அடிபாகத்தை சிறு தீயில் காண்பியுங்கள்.
பாத்திரம் லேசாக சூடானால் போதுமானது .பத்து வினாடிகள் கூட போதும்.
பாத்திரம் இலகுவான சூட்டில் இருக்கும் போதே ஒரு கத்தியோ இல்லை ஸ்பூனோ கொண்டு ஸ்டிக்கரை லேசாக தூக்கி விடுங்கள்.இலகுவாக எடுக்க வரவில்லை என்றால் மீண்டும் பாத்திரத்தை லேசாக சூடு பண்ணி கொள்ளுங்கள்.கத்தியால் தூக்கி விட்ட பிறகு கைகளாலேயே எளிதாக எடுத்து விடலாம்.sticker ரும் பிய்யாமல் முழுதாக வந்து விடும்.
அடுத்த முறை புது பாத்திரம் வாங்கும் போது மறக்காமல் இந்த முறை பின்பற்றி பாருங்கள்.

Post a Comment Blogger Facebook