செய்முறை :
முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து கொள்ளவும். கைகளை மடக்கி தலையில் வைத்துக்கொள்ளவும். கால்களை
ஒரு அடி மேலே தூக்கி வலது காலை மட்டும் முட்டி வரை மடக்கவும்.
இப்போது உடலை முன்புறமாக எழுந்து (படத்தில் உள்ளபடி) கை முட்டியால் கால் முட்டியை தொட வேண்டும். இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி வேகமாக செய்ய வேண்டும். இவ்வாறு 15 முதல் 20 முறை செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். அதிகளவு தொப்பை உள்ளவர்கள் எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து 30 நிமிடங்கள் செய்து வந்தால் 3 மாதத்தில் உங்கள் தொப்பை மாற்றம் தெரிவதை காணலாம்.
Post a Comment Blogger Facebook