0
வீட்டிலேயே வெந்தய கீரையை எளிதாக வளர்க்கலாம்.வீட்டு தோட்டம் அல்லது பால்கனி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் கோதுமை புல்க்கு பிறகு எளிதாக வளர்க்க கூடிய கீரை வகை.

விதைக்கு எங்கேயும் தேடி அலைய வேண்டாம்.அஞ்சறை பெட்டியில் இருக்கும் வெந்தயமே போதுமானது :-).வெந்தயத்திலும்  வெந்தய கீரையிலும் இருக்கும் சத்துக்கள் சொல்லி மாளாது

வெந்தய கீரையின் பலன்களை தமிழில் படிக்க : இங்கே கிளிக்கவும்
ஆங்கிலத்தில் படிக்க : இங்கே கிளிக்கவும் 

இவ்வளவு சத்துக்கள் நிரம்பிய கீரையை எந்த பூச்சி கொல்லி மருந்துகளும் இல்லாமல் இயற்கை முறைப்படி வளர்த்தால் தானே அதன் சத்துக்கள் நம்மை முழுமையாக சென்றடையும்.

எப்படி வளர்ப்பது என்று படி படியாக பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
a)வெந்தயம் - 50 முதல் 100 கிராம் (நீங்கள் வளர்க்க பயன்படுத்தும் pot டை    பொருத்தது.
b)ஒரு pot -  அகலமாக இருந்தால் நல்லது.நான் என்னுடைய உருளி அலங்காரத்திற்கு வாங்கிய உருளியை பயன்படுத்தி உள்ளேன்.
c)potting mix : நான் மண்ணையே உபயோக படுத்தி உள்ளேன்.


1 )வெந்தயத்தை 8 -12 மணி நேரம் நன்றாக நீரில் ஊற வைத்து கொள்ளவும்.


2) பின் நீரை வடித்து துணியிலோ hot pack க்கிலோ போட்டு மூடி 8-12 மணி நேரம் நன்றாக முளை கட்டி கொள்ளவும். 




3) இப்போது உங்கள் விதைகள் தயார்.நீங்கள் வளர்க்க போகும் தொட்டியின் உயரம் 5-6 இன்ச்களாவது இருக்க வேண்டும்.நடவேண்டிய தொட்டியில் மண்ணை நிரப்பி கொள்ளுங்கள்.பின் வெந்தயத்தை நன்றாக பரப்பி தூவி விடுங்கள்.விதைகளை நெருக்கமாக தூவ வேண்டும்.
     

4) பின் மேலே மண்ணை தூவி மூடுங்கள்.லேசாக விதைகள் மறையும் அளவு தூவினால் போதுமானது.


5) நீரை தெளித்தால் போதும்.ஊற்ற வேண்டாம்.தொட்டியில் எப்போதும் ஈர பதம் இருக்க வேண்டும்.கவனம்: ஈரப்பதம் ...ஈரமாக அல்ல.தண்ணீர் அதிகம் விட்டால் விதைகள் அழுகி விடும்.கீழே படத்தில் இருப்பது வளர்ந்து 7 நாட்கள் ஆன கீரை தளிர்கள். 
                                                .

6)நேரடியாக சூரியனுக்கு கீழே வைக்க கூடாது.சூரிய வெளிச்சம் இருக்கும் இடமே போதுமானது.கீழே படத்தில் இருப்பது வேறு ஒரு பிளாஸ்டிக் கப்பில் வளர்ந்து உள்ள கீரை.அடியில் சூடான கம்பி கொண்டு நீர் வெளியேற துளைகள்  இட்டுள்ளேன்.

7) பார்க்கவே மிகவும் fresh ஆக இருக்கு இல்லையா...முழுதாக அறுவடை செய்ய ஒரு மாதம் ஆகும். தளிர்களின் மேலே வெந்தயத்தின் தோல் ஒட்டி கொண்டு இருக்கிறது.


8) இது இணையத்தில் எடுத்த முழுதாக வளர்ந்த வெந்தய கீரையின் படம்.என் தொட்டியில் வளர்வதை அவ்வபோது அப்டேட் செய்கிறேன் :-)

image:facebook

என்னுடைய வெந்தய கீரை அறுவடைக்கு தயாராக உள்ளது.நாளை பறித்து விடுவேன்.




தொடர்புடைய பதிவுகள்:


FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும் 
https://www.facebook.com/kanavu.illam.blog

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top