0

கும்பக்கரை அருவி: 



       கும்பக்கரை அருவியானது கொடைக்கானல் மலையடிவாரம் பெரியகுளத்திலிருந்து ஏலாவது கிலோமீட்டரில் உள்ளது. குறைவான உயரத்திலிருந்து விழுந்தாலும் குளிப்பதற்கு மிக இதமாக இருக்கும் அருவி. கொடைக்கானல் சில்வர் பால்ஸ்(silver falls)  உடைய  துணை அருவி தான் இது. 

சுருளி அருவி(Suruli Falls):


சுருளி அருவிகம்பத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், தேனியிலிருந்து 56  கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.  சுருளி அருவி சுமார் 150 அடி உயரத்திலிருந்து பாறையின் மேல் முத்தமிட்டு மீண்டும் 40 அடி உயரத்திலிருந்து கீழ் நோக்கி பாய்வதைப் பார்க்க கண் கொள்ளாக்காட்சியாகவும், இயற்கையின்  அழகாகவும் உள்ளது.அருவிக்கு செல்லும் பாதையின் ஓரத்தில் உள்ள இயற்கை காட்சிகள் எல்லாம் கண்களுக்கு விருந்தளிப்பது போல் இருக்கும்.இதை கேமராவில் கிளிக் செய்ய மறந்துவிடாதிர்கள். மேலும் அருவிக்கு செல்லும் வழியில் திராட்சை தோட்டங்கள் உள்ளன. இங்கு நீங்கள் சுத்தமான திராட்சைகளை வாங்கிக் கொள்ளலாம். தேக்கடி,வைகை அணைகளுக்கு வருகை தரும் சுற்றுலாவாசிகள் மறக்காமல் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியை கண்டு மகிழுங்கள்.


குரங்கு அருவி(monkey falls): 

இந்த மன்கி பால்ஸ்ஆனது பொள்ளாச்சியிலிருந்து 18 கி.மீ தூரத்திலிருக்கும்மன்கி பால்ஸ் இல்  குளிக்க குளிக்க சுகம்தான். அருவியிலிருந்து மேலே சென்றால் வால்பாறை,டாப்ஹில்ஸ் கீழே சென்றால் ஆழியார் டேம் என ஒரு நாள் முழுவதும் சுற்றி வரலாம். குறிப்பு: பாரஸ்ட் செக் போஸ்ட் கடந்து சென்றவுடன் மன்கி பால்ஸ்உள்ளது. எல்லோரும் இதை பார்த்தவுடன் இங்கேயே சென்று வருகின்றனர்.ஆனால் மேலே சிறிது தூரம் சென்றால் இன்னொரு பெரிய மன்கி பால்ஸ் உள்ளது


கொல்லிமலை அருவி(Kolli falls): 


கொல்லிமலை அருவி 600  அடி உயரத்தில் ஆகாயத்திலிருந்து விழுவதுபோல் இருப்பதால் ஆகாய கங்கை என்று கொல்லிமலை அருவிக்கு பெயர். நாமக்கல்லிலிருந்து 55 கி.மீ தூரத்திலிருக்கிறது. 26  கி.மீ மலைப்பயணம் செய்ய வேண்டும். 70 கொண்டாய் ஊசி வளைவுப் பயணம் சிலிர்ப்படையச் செய்யும்.சுற்றுலாப் பயணிகள் நாமக்கலில் தங்கிக் கொள்ளலாம்


கோவை குற்றாலம்(kovai-kuttralam)


இந்த  கோவை குற்றாலம் ஆனது கோவையிலிருந்து 37 கீ.மி தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி நீராக சுவையாக ஊற்றெடுத்து வரும் அருவி தான்கோவை குற்றாலம்ஆகும்.அருவியை அடைய சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லாததால் 4 மணிக்குள் குளித்து முடித்துவிடவேண்டும். மேலும் இங்கு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் சிறிது எச்சரிக்கையாக குளிக்க வேண்டும்.ஏற்கனவே இங்கு யானையிடம்  சிக்கி ஒரு குழந்தை இறந்துள்ளது.எனவே குழந்தையுடன் வருபவர்கள் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும். கோவை குற்றாலத்திலிருந்து சிறிது தூரத்தில் வெள்ளியங்கிரி மழையும், வன பத்ரகாளியம்மன் கோவிலும், தென் திருப்பதி கோவிலும் உள்ளது. பொதுவாக வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் கோவை குற்றாலம், வன பத்ரகாளியம்மன் கோவில் , தென் திருப்பதி கோவில்,மருதமலை முருகன் கோவில்  ஆகிய இடங்களுக்கு சென்று வருவது வழக்கமாக வைத்துள்ளனர்


திருமூர்த்தி வாடர்பால்ஸ்: 


திருமூர்த்தி அணையும் அதன் நீர்வீழ்ச்சியும் சுற்றுலாவாசிகளுக்கு இன்னொமொரு சுற்றுலதலமாக உள்ளது. அதன் அருகே முதலை வளர்ப்பு பண்ணையும் உள்ளது. மேலும் வருடம் முழுவதும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிறு ஓடையும் உள்ளது.இந்ததிருமூர்த்தி வாடர்பால்ஸ்  ஒட்டி தெய்வீக தன்மை கொண்ட அமலிங்கேஸ்வரர் கோவில் அமைத்துள்ளது. இதனால்  கோயிலின் மேல் நீர்வீழ்ச்சி வந்து ஊற்றுவதைப் பார்க்க கண்கொல்லாகாட்சியாகவும்  அழகுக்கு அழகு சேர்த்தது போலவும் உள்ளது. இந்ததிருமூர்த்தி வாடர்பால்ஸ்உடுமலைபேட்டையிலிருந்து 20 கீ.மி தொலைவில் பழனி-கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.சுற்றுலாப்பயணிகள் உடுமலைபேட்டையில் தாங்கிக்கொள்ள வசதிகள் உள்ளது.


சில்வர்பால்ஸ்(silver falls):


மதுரை-கொடைக்கானல்  சாலையில் தென்படும் சில்வர் பால்ஸ் நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை முதன்மையாக கவரும் தன்மையுடையது. இந்த சில்வர் பால்ஸ் 180 அடி உயரத்திலிருந்து வேகமாக வரும் இத்தண்ணீர் அடுக்கடுக்கான பாறைகளில் பட்டு கொட்டுவதைப் பார்க்கும் எவரையும் கவர்ந்து இழுத்துவிடும்.கண்ணாடிப்போல் தெள்ள தெளிவாக தெரியும் இந்நீரில் பல வகையான கனிமங்கள் கலந்துள்ளது. கொடைக்கானல் ஏரியிலிருக்கும் அதிகப்படியான நீர் கீழ் நோக்கி பாய்ந்து வந்து அருவியாக கொட்டுகிறது.கொடைகானலிலிருந்து 8 கீ.மி தொலைவில் உள்ளது.இந்தசில்வர் பால்ஸ் அருவியில் குளித்தால் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இப்பள்ளமான இடத்தில வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது.இங்கு உள்ள கடைகளில் பழங்களும், காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களும் விற்கப்படுகிறது. இயற்கை அழகை ரசிப்பவர் எவராயினும் இங்கே மணிகணக்கில் உட்கார்ந்து பார்த்து பரவசம் அடைவர்.

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top