0

மக்கள்தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம்இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம்எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக்கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு(தடி), சிறு கத்தி, கோடரிபோன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக்கலையைப் பயன்படுதினர்.



தமிழர்கள்ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்தகாலத்தில் முதலில் எடுத்தது கம்புஎனப்படும் ஆயுதமே ஆகும். இதுவேபின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்புபோன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்தஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சிலபள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத்தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.

சிலம்பச்சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச்சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம்அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால்அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறுமாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன்களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்புஎன்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும்கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

சிலம்பாட்ட வகைகள்:
  • ·         துடுக்காண்டம்
  • ·         குறவஞ்சி
  • ·         மறக்காணம்
  • ·         அலங்காரச் சிலம்பம்
  • ·         போர்ச் சிலம்பம்
  • ·         பனையேறி மல்லு
  • ·         நாகதாளி,
  • ·         நாகசீறல்,
  • ·         கள்ளன்கம்பு



Post a Comment Blogger

 
Top