துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.
முளைத்து சாதி ஆனதோ
மதத்திற்கு மதம் பிடித்து
மரணம் ஆகின்றதோ?
இதுவா சுதந்திரம்?
சாதியா நம்
ஒருமைப்பாடு?
மதமா நம்
ஒற்றுமை?
உண்மை தான்
நம் பண்பு..!
உழைப்பு தான்
நம் தெம்பு..!
அன்பு ஒன்று தான்
நம் பிணைப்பு..!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;
விடியலை நோக்கி செல்கின்றோம்;
வேகம் கொஞ்சம் குறைவுதான்;
தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;
தயங்கி நிற்கவும் போவதில்லை;
பயணம் என்றும் தொடரும்;
விடியலை வென்றும் காண்போம்.
சந்திரனுக்கு பகலில் சுதந்திரமில்லை
பளிச்சென்ற பகலிலும் பனிவிழும்
இரவிலும் முப்பொழுதிலும் எப்பொழுதிலும்
இந்தியனுக்கு சுதந்திரம் உண்டு !!!
ஆங்கிலேயனிடம் அடிமையானது அறியாமையினால்
வளமையை விட்டது புரியாமையினால்
மிஞ்சியவற்றை அந்நியனுக்கு விற்காமல்
இநதிய வளர்ச்சிக்கு இயற்கையை
அழைத்து மரியாதை செய்து
வளம் பெருக்கி வானுலகம்
போற்ற வல்லரசாக்கி இந்தியாவை
இமயமெனத் தூக்கி நிறுத்துவோம்
பெற்ற சுதந்திரத்தைப் போற்றுவோம்
அனைவருக்கும் பயனுள்ளதாய் மாற்றுவோம் !!!
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.