0

சுய படம் (செல்ஃபி) எடுத்துக்கொண்டதும் பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும்தான் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்ன? இனி சுய படங்களைக் கைகளில் கூட அணிந்து கொள்ளலாம். நெதர்லாந்து நிறுவனம் இப்படி சுய படங்களைக் கைகளில் பச்சை குத்திக்கொள்வது போல் தற்காலிக டாட்டூவாக அணிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.


பிக்காட்டூ எனும் அந்த நிறுவனம் பயனாளிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களைக் கைகளில் ஸ்டிக்கர் போல ஒட்டிக்கொள்ளக்கூடிய டாட்டூவாக மாற்றித் தருகிறது. 15 டாலர் செலவில் இப்படி ஒரு டஜன் சுய படங்களை டாட்டூவாகத் தருவித்துக்கொள்ளலாம். இந்த டாட்டூகள் ஒரு வாரத்துக்கு காலம் அழியாமல் இருக்குமாம். உலக அளவில் ஷிப்பிங் உண்டு என்கிறது பிக்காட்டூ. இதன் இணையதளத்தைப் பார்த்தால் உலகம் முழுவதும் உருவாக்கப்படும் சுய பட டாட்டூக்களைப் பார்த்து ரசிக்கலாம்.


பிக்காட்டூ LINK: http://picattoo.com/

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top