ப்ளாஷ் ட்ரைவ்களைத் தயாரித்து வழங்குவதில், உலக அளவில் புகழ் பெற்ற சான் டிஸ்க் நிறுவனம், அண்மையில் 128 ஜி.பி. கொள்ளளவு கொண்ட, உலகிலேயே மிகச் சிறிய யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை SanDisk Ultra Fit USB 3.0 என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அண்மையில் நடைபெற்ற Computex 2015 கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன் விசேஷ அம்சங்கள்:
வழக்கமான யு.எஸ்.பி. 2 வகை ப்ளாஷ் ட்ரைவ்களைக் காட்டிலும் பத்து மடங்கு கூடுதல் வேகத்தில் டேட்டாவினை பரிமாறிக் கொள்ளும். விநாடிக்கு அதிக பட்சம் 130 எம்.பி. டேட்டா படித்தறியும் திறன் கொண்டது. சான் டிஸ்க் நிறுவனத்தின், பாஸ்வேர்ட் மூலம் பாதுகாப்பு வழங்கும் சாப்ட்வேர் இதில் உள்ளது. 128 பிட் என்கிரிப்ஷன் செயல்பாட்டினை இதில் மேற்கொள்ளலாம். பைல்கள் அழியும் பட்சத்தில், அவற்றைத் திரும்பப் பெற்றுத் தருவதற்கு RescuePRO என்னும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் வழங்கப்படுகிறது.
இது யு.எஸ்.பி. 3 வகை தொழில் நுட்பத்தில் செயல்பட்டாலும், யு.எஸ்.பி. 2 வகை தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களுடனும் இயங்கும் தன்மை கொண்டது.
128 ஜி.பி. கொள்ளளவு கொண்ட, இதன் விலை 119.99 டாலர் ஆக நிர்ணயம் செய்யப்படும். 256 ஜி.பி. கொள்ளளவு கொண்ட ட்ரைவ் 200 டாலர் என்ற அளவில் விலையிடப்படலாம். இந்த இரண்டும் ஒரே நேரத்தில் பன்னாட்டளவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போது வரும் என்று தெரிவிக்கப்படவில்லை.
Post a Comment Blogger Facebook