Capsicum
/ Bell Peppers-Kudai Milagai-குடை மிளகாய்
உடலுக்கு மிகவும் பயனுள்ள சத்துக்களை அளிக்கும் குடை மிளகாயை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
குடைமிளகாயில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. மேலும் வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.
இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது, அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது.
குடை மிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடை மிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.
இதில் வைட்டமின் ஏ, சி, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.
கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்டவிடாமலும் குடை மிளகாய் காக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் சி சத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அஜீரணத்தை விரட்டலாம்.
பயன்கள்
நீரிழிவு நோயிலிருந்து விடுபட இது ஒரு சிறந்த மருந்து.
இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் சர்க்கரையின் அளவு குறையும்
Post a Comment Blogger Facebook