அன்னதானம்
உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, மனிதனோ, பறவையோ, மிருகமோ, புழுபூச்சியோ, எது வருகிறதோ அதுவே அதிதி. இவை யாவும் உணவை நாடுகின்றன. உன்னிடம் வரும் உண்மையான அதிதியை, நீ அதிதியாகக் கருதுவதில்லை. காக்கைக்கு உணவு அளிக்கு.ம் சமயத்தில், சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டு போய் வீட்டுக்கு வெளியே வை. எந்தப் பிராணியையும் கூவி அழைக்காதே. வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே. எந்தப் பிராணி உணவுகொள்ள வந்தாலும் அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாதே. இவ்வாறாக இலட்சம் விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய். "பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!"
-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Post a Comment Blogger Facebook