கார்த்திகை வந்தாச்சு.எல்லா வேலைகளுக்கும் நடுவே வெண்கல விளக்குகளை பள பள என்று விளக்குவது ஒரு பெரிய வேலை தானே...அதுவும் நிறைய விளக்குகள் இருந்தால் அதிக அளவு நேரம் இதற்கே செலவிட வேண்டி இருக்கும்.அந்த நேரத்தை குறைப்பதற்க்கான ஒரு எளிய வழி தான் இந்த பதிவு.
இந்த வழி அவள்விகடனிலையோ சிநேகிதிலையோ படிச்சா நினைவு...இந்த முறை உபயோகபடுத்தி பார்த்தேன்.
தேவையான பொருட்கள் :
கையளவு புளி
ஒரு பெரிய பாத்திரம்
முதலில் கையளவு புளி எடுத்து கொண்டு பாத்திரம் முழுக்க நீர் நிரப்பி அதில் கரைத்து கொள்ளவும்.
பின் அனைத்து விளக்குகளையும் இந்த நீரில் ஊற வைக்கவும்.
ஒரு நாள் இரவு முழுவதும் ஊறலாம்.
காலையில் விளக்குகளை எடுக்கும் போதே நல்ல பள பளப்பாகத்தான் இருந்தது.பின் நீங்கள் உபயோகிக்கும் பவுடர் (நான் பீத்தாம்பரி உபயோக படுத்தினேன்) கொண்டு லேசாக தேய்த்து கழுவி விடுங்கள்.
எப்போதும் ஆகும் நேரத்தை விட பாதி கூட ஆக வில்லை.
அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.
Post a Comment Blogger Facebook