0

நிகிலாதங்கதுரை எனது சினேகிதி.இல்லத்து அரசி . கைவினை பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.நீண்ட நாட்களாக கனவு இல்லத்திற்குக்காக ஒரு கைவினை செய்து காமிக்குமாறு கேட்டிருந்தேன்.அதனை தொடர்ந்து அவர் அழகாக ஒரு recycling  / upcycling craft  செய்து அனுப்பி இருக்கிறார்.

தேவையான பொருட்கள் 
ஒரு பழைய T  shirt 
கத்திரிக்கோல் 

ஒரு பழைய  shirt இன் உடம்பு பகுதியை வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.பின் உங்கள் cushion அளவை விட அதிகமாக நான்கு பக்கமும் இரண்டு இன்ச் விட்டு கத்திரியுங்கள். 

ஒரு பக்கத்தை மட்டும் விட்டு மற்ற மூன்று பக்கங்களிலும் படத்தில் காண்பித்திருப்பது  போல முடிச்சிட வேண்டும் .(மேற்பக்கம் stripe um கீழ்புறம் உள்ள stripe யும் சேர்த்து )



இப்போது cushion நை நடுவில் வைத்து மீதி உள்ள பக்கத்திலும் கட் பண்ணின stripes யை முடிச்சு இட்டு கொள்ளுங்கள். சுற்றிலும் இதே போல முடிச்சு இட்டு முடித்தால் தையலே தேவை இல்லாத அழகிய cushion கவர் எளிதில் தயார்.


கீழே என்னை கவர்ந்த அவரது மற்ற கைவேலைபாடுகளை பகிர்ந்து இருக்கிறேன்.

இது பழைய இரண்டு pant களில் இருந்து கத்தரித்து patch  வொர்க் செய்து நிகிலா அவர்கள் செய்த இன்னொரு cushion கவர் 


வட்ட குஷன்
ஸ்மாக்கிங் 
ஸ்மாக்கிங் குஷன் மீது ஸ்மாக்கிங் mobile பவுச்
சின்ன சின்ன சதுர துணியை சேர்த்து தைத்த cushion கவர்

அழகிய மொபைல் pouch 
ஜீன்ஸ் துணியில் ஒரு மொபைல் pouch 
puppy
வுல்லன் கோழிகுஞ்சு
ரெண்டு இன்ச் குட்டி stool
இந்த மாதிரி சின்ன சின்ன கைவேலைகள் தானே நம்மை உயிர்ப்புடன்  வைத்திருகிறது.வாழ்த்துக்கள் நிகிலா...

Post a Comment Blogger

 
Top