0
தோள்பட்டை வலுவடைய செய்யும் பயிற்சிகுறுக்காக எழுதல் (Diagonal Raises) இந்த உடற்பயிற்சி தோள்பட்டைகளை வலுவடையச் செய்யும். நின்ற நிலையில் இந்த பயிற்சியை தொடங்க வேண்டும். வலது கையில் ஒரு டம்ப் பெல்லை வைத்துக் கொள்ளுங்கள். டம்ப் பெல்லை இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதை பயன்படுத்தலாம். விரிப்பில் நேராக நின்று கொண்டு வலது கையை உடலின் முன் பக்கம் குறுக்காக இடுப்பு வரை எடுத்து செல்லுங்கள். நேராக வைத்திருக்கும் கைகளை, இப்போது மெதுவாக உங்கள் முன்
உயர்த்தி, இப்போது மீண்டும் உங்கள் உடலின் குறுக்காக கொண்டு செல்லுங்கள். 

அது உங்கள் வலது தோள்பட்டையை தாண்டி செல்ல வேண்டும். பின் மெதுவாக கைகளை கீழிறக்கி இடது பக்க இடுப்புக்கு மீண்டும் கொண்டு செல்லுங்கள். இதே உடற்பயிற்சியை இப்போது இடது கையை கொண்டு செய்யுங்கள். 

இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 15 முதல் 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைக்கும்.ஆனால் இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்யது வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Post a Comment Blogger

 
Top