ஸ்டெப் அப் பயிற்சி:
இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் 20 நிமிடம் செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். இந்த பயிற்சி செய்ய ஒரு பென்ச் அல்லது படிக்கட்டின்
மேல் ஏறவும்.
இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி இடது காலை மட்டும் உயர்த்தவும். இரண்டு கைகயையும் மேலே உயர்த்த வேண்டும். இதன் பிறகு வலது காலை கீழே இறக்கி இடது காலை உயர்த்தவும். இதே போல் கால்களை மாற்றி மாற்றி செய்யவும்.
ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 20 முதல் 25 முறை செய்யலாம்.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு, தொடை மற்றும் கெண்டைக்கால் சதைகள் வலுடையும்.
Post a Comment Blogger Facebook