0
ஈஸியாக செய்யக்கூடிய சிறப்பான உடற்பயிற்சிகள்நம்மில் பலருக்கும் போதுமான அளவு ஜிம்முக்கு சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கான நேரமோ, சக்தியோ அல்லது வசதியோ இருப்பதில்லை. உடல் உறுதியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளை சிகிச்சை மையத்தில் தொடர்ந்து செய்ததன் மூலமாக, வாக்கர்களை பயன்படுத்தி நடந்து வந்த 80 மற்றும் 90 வயதான பெரியவர்கள் பலரும், பத்தே வாரங்களில் இப்பொழுது வெறும் குச்சிகளைப் பிடித்துக் கொண்டே நடக்கிறார்கள் என்று, அண்மையில் நடந்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 

அப்படி வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் உள்ளன. இவை ஒரு நிலையான நாற்காலி, பயிற்சிக்கான
பாண்ட் கயிறு (Band) மற்றும் சுவர் ஆகியவற்றைக் கொண்டு மட்டும் எல்லா வயதைச் சேர்ந்த நபர்களும் வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள். சரி, இப்போது அந்த பயிற்சிகளைப் பார்ப்போமா!!! 

* கால்களை அழுத்துதல் (Leg Press) : 

நாற்காலியில் நேராக உட்காரவும். ரெசிஸ்டன்ஸ் பாண்ட்டின் இரு முனைகளையும் கையில் பிடித்துக் கொண்டு, ஒரு காலை அதன் அந்த பேண்ட் கயிற்றின் நடுவே வைத்து, காலை மெதுவா நேராக நீட்டி, மேலே முடிந்த வரையில் தூக்க வேண்டும். இதே செயலை மற்றொரு காலிலும் செய்யவும். 

* உட்கார்ந்த படி மார்பை அழுத்துதல் (Seated Chest Press)) : 

நாற்காலியில் நேராக அமரவும். பாண்ட் என்னும் கயிற்றை உங்கள் பின்பகுதியில் சுற்றி விடவும். அதன் இருமுனைகளும் உங்களுடைய அக்குளின் கீழ் இருக்குமாறு செய்யவும். 

உங்களுடைய முழங்கைகள் இரண்டும் நேராக இருக்கும் வகையில் வரும் வரையிலும் கைகளிரண்டையும் அழுத்துங்கள். பின்னர் உங்கள் கைகள் இரண்டையும் அக்குள் பகுதியின் கீழ்வரும் வரையிலும் பின்னால் கொண்டு வரவும்.

Post a Comment Blogger

 
Top