0
முதுகுக்கு வலிமை தரும் பயிற்சிநெடு நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், தொடர்ந்து நீண்ட தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் முகுது வலி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அப்படி முதுகு வலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 
முதுகு வலி பிரச்சனைக்காக ஜிம்முக்கு போக வேண்டும் என்பதில்லை இந்த பயிற்சியை தினமும் 30 நிமிடம் செய்து வந்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்ய விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். பின்னர் கால்களை
முட்டிவரை மடக்கி நாற்காலியில் அமருவதை போல் அமரவும். 

பின்னர் வலது கையை இடது கால் முட்டியில் வைத்து இடது கையை மேல் நோக்கி (படத்தில் உள்ளபடி) தூக்கவும். தூக்கிய இடது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். 

இவ்வாறு கால்களை மாற்றி வலது பக்கம் செய்யவும். இவ்வாறு 15 முதல் 20 முறை செய்ய வேண்டும்.  இந்த பயிற்சி தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

Post a Comment Blogger

 
Top