0

Bitter-gourd-Pagarkaai-பாகற்காய்




     காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.


அதனால்தான் நம் வீடுகளில் பாகற்காயை ஊறுகாய், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என்று பலவிதங்களில் சமைத்து உண்கிறோம்.

100
கிராம் பாகற்காயில், 25 மில்லி கிராம் கலோரி, 20 மி.கி. கால்சியம், 70 மி.கி. பாஸ்பரஸ், 1.6 சதவீதம் புரதம், 0.2 சதவீதம் கொழுப்பு, 1.8 மி.கி. இரும்புச் சத்து, 0.8 சதவீதம் தாதுக்கள், 88 மி.கி. பி காம்ப்ளெக்ஸ், 0.8 சதவீதம் நார்ச்சத்து, 4.2 சதவீதம் கார்போஹைட்ரேட் சத்துகள் உள்ளன.

வைட்டமின் , பி, சி, பீட்டா கரோட்டின், பிளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

மருத்துவப் பயன்கள்:


             பாகற்காயில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டி ஹைபர் கிளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு தேவைப்படும்  சர்க்கரையைக் கொண்டு செல்லும் முக்கிய வேலையை செய்கின்றன.

அதுமட்டுமல்லாது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

மேலும் செரிமான அமிலமான காஸ்ட்ரிக் ஆசிட் அதிகமாக சுரப்பதால் பசி அதிகரிக்கும்.

பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள்

விஷத்தன்மையுள்ள அழுத்தத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

பாகற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

'
டைப் 2' நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள 'பாலிபெப்டைடு-பி' என்ற வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக்   குறைக்கிறது.

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும்       உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகின்றன.
எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது       அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்!

Post a Comment Blogger

 
Top